Friday, May 27
Shadow

சந்தானம் இடத்தை யாராலும் நிரப்ப முடியவில்லை: சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் – நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `வேலைக்காரன்’.

மோகன் ராஜா இயக்கத்தில் சமூக பிரச்சனையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த படத்தை 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரித்திருக்கிறார். மலையாள நடிகர் பகத் பாஷில், பிரகாஷ் ராஜ், சினேகா, ரோகினி, ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சதீஷ், ரோபோ சங்கர், விஜய் வசந்த் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

அனிருத் இசை அமைத்துள்ள இந்த படம் கிறிஸ்துமஸை முன்னிட்டு வருகிற டிசம்பர் 22-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதேநாளில் தான் சந்தானம் நடித்துள்ள சக்க போடு போடு ராஜா படமும் ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில், சந்தானம் குறித்து சிவகார்த்திகேயனிடம் கேட்ட போது அவர் கூறுகையில்,

கவுண்டமணி, விவேக், வடிவேலுவுக்குப் பிறகு காமெடியில் தனி முத்திரை பதித்தவர் சந்தானம். அவர் இடத்தை நிரப்ப இன்னும் யாரும் வரவில்லை. ஹீரோவாக நடிக்க அவர் எடுத்த முடிவு, துணிச்சலானது. ஹீரோவாக அவர் வெற்றி பெறுவார் என நம்புகிறேன். அதேநேரத்தில் சந்தானத்தையோ அல்லது வேறு யாரையா தான் போட்டியாக நினைக்கவில்லை. எனது முந்தைய படங்களையே போட்டியாக நினைக்கிறேன் என்றார்.

Leave a Reply