Wednesday, February 1
Shadow

அடுத்தடுத்து பிசியான காலா பட நாயகி

மாடல் அழகியான சாக்‌ஷி அகர்வால், அட்லீ இயக்கிய ‘ராஜா ராணி’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

பின்னர் ‘யோகன்’ படத்தில் நாயகியாகவும் நடித்திருக்கிறார். தொடர்ந்து திருட்டு விசிடி, அத்யன், க க க போ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். அவரது நடிப்பில் அடுத்ததாக ஜெயிக்கிற குதிர படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. இதுதவிர பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘காலா’ படத்தில் முக்கிய கதாபாத்திலும் நடித்திருக்கிறார்.

ஹாலிவுட் படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். இவ்வாறாக பிசியாக இருக்கும் சாக்ஷி அடுத்ததாக மலையாள சினிமாவிலும் காலடி எடுத்து வைத்திருக்கிறார். ‘ஓராயிரம் கினாக்களாள்’ என்ற படம் மூலம் மலையாள சினிமாவிலும் அறிமுகமாகிறார்.

அறிமுக இயக்குனரான ப்ரமோத் மோகன் இயக்கும் இந்தப் படத்தில் பிஜு மேனன் ஜோடியாக சாக்‌ஷி நடிக்கிறார். இப்படத்தில் இவரே சொந்தக் குரலில் பேசுவதற்காக மலையாளம் கற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply