“யு டர்ன்” – திரைவிமர்சனம் (மைல்கல்) Rank 4.5/5
தமிழ் சினிமாவின் இல்லை இந்திய சினிமாவின் ஒரு மைல்கல் என்று தான் சொல்லவேண்டும் இந்தக் படத்தை "யு டர்ன்" ஒவ்வொரு காட்சியும் படத்தின் பலம் என்று தான் சொல்லணும் கதையை தவிர வேறு எந்த கோணத்திலும் பயணிக்கவில்லை இந்த இயக்குனரை இதற்க்கு பாராட்டவேண்டும்.
படத்தில் சமுக காரை அதோடு ஒரு வித்தியாசமான கதைக்களம் அடேங்கப்பா என்று வியக்கவைக்கும் திரைகதை ஒரு சாலை விபத்தை வைத்து கொண்டு இப்படி ஒரு திரைகதையா என்று பிரமிக்க வைக்கிறார் இயக்குனர் பவண்குமார்.
இந்த படம் ஒரு கன்னட ரீமேக் என்று சொன்னால் நம்பிவிர்களா ஆம் இது கன்னடத்தில் தான்முதலில் வந்தது இதை தெலுங்கு மற்றும் தமிழில் இப்போது தயாரித்து வெளியிட்டுள்ளனர்.கன்னடத்தில் இயக்கிய பவண்குமார் தான் தமிழிலும் தெலுங்கிலும் இயக்கியுள்ளார் அதனால் தான் சாராம்சம் கொஞ்சமும் குறையாமல் உள்ளது
கதை: சென்னை, வேளாச்சேரி பாலத்தில் சட்டத்திற்கு புறம்பாக, சென்டர் மீடிய...