டூப் இல்லாமல் சந்தானம் போட்ட அதிரடி சண்டைக் காட்சி
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில் கே.எஸ். சீனிவாசன், கே.எஸ்.சிவராமன் தற்போது பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் “ ஒரு பக்க கதை “ படத்தை தயாரித்து வருகிறார்கள் அந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அதை தொடர்ந்து சந்தானம் நாயகனாக நடிக்கும் “ ஓடி ஓடி உழைக்கனும் “ படத்தையும் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள். நாயகியாக அமோரா தஸ்தர் நடிக்கிறார்.மற்றும் யோகி பாபு நான் கடவுள் ராஜேந்திரன், சுவாமிநாதன், ஊர்வசி மதுசூதனராவ், மன்சூரலிகான், மயில்சாமி இவர்களுடன் இன்னும் ஏராளமான நட்சத்திர நடிகர்கள் நடிக்கிறார்கள்.
ஓடி ஓடி உழைக்கனும் படத்திற்காக சமீபத்தில் சென்னையில் அதிரடியான ஒரு சண்டைக் காட்சி படமாக்கப் பட்டது. வில்லனாக...