சர்கார் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா
ரஜினிகாந்த் தான் நடித்த ஒவ்வொரு படம் வெளியாகும்போதும், அதிரடியாக ஒரு கருத்து தெரிவித்து, பெரும் பரபரப்பை ஏற்படுத்துவது, ரஜினியின் வழக்கம்' என, கோலிவுட் வட்டாரத்தில், ஒரு கருத்து உண்டு. அந்த யுத்தியை, விஜயும் கையாளத் துவங்கி விட்டதாக, சமீபத்தில் பேச்சு எழுந்தது.
சர்கார் ஆடியோ ரிலீசின் போது, அவர் தெரிவித்த அரசியல் ரீதியான சில விஷயங்கள் தான், பெரும் விவாதங்களுக்கு வழி வகுத்தது. தற்போதுள்ள பரபரப்பான அரசியல் நிகழ்வுகளால், அந்த விஷயம், சற்று அடங்கி போய் விட்ட நிலையில், படத்தின் டீசர் இன்று ரிலீசாகும்போது, மீண்டும் அந்த பரபரப்பு தொற்றும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.அதோடு புகைப்படங்களில் அரசியல் சாயம் தெரிகிறது இன்று வெளியாகும் டீசரில் இருக்கும் என்று ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்நோக்கியுள்ளனர்....