சர்கார் படத்தின் பாடலுக்காக மீண்டும் கம்போஸ் பண்ணும் ஏ.ஆர்.ரகுமான்
ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் விஜய் கூட்டணி தமிழ் சினிமாவின் மிக ராசியான கூட்டணி என்பது நாம் அறிந்த விஷயம் இந்த கூட்டணி முதல் முறையாக தெலுங்கிலும் இணைகிறது ஆம் சர்கார் படம் தயாரிப்பு நிறுவனம் திடீர் என்று தெலுங்கிலும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளனர்.
ஏஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் சர்கார். இப்படம் தீபாவளிக்கு ரிலீஸாக உள்ளது.படத்தின் பாடல்கள் ரிலீசாகி தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. நடிகர் விஜய்க்கு தமிழகத்திற்கு அடுத்ததாக கேரளாவில் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது தெரிந்த விஷயம். அதுபோல், தெலுங்கு சினிமாவிலும் மாஸ் ஹீரோவாக வலம் வர ஆரம்பித்திருக்கிறார் விஜய். அதனால் சர்கார் திரைப்படத்தை தெலுங்கு மொழியிலும் மொழிமாற்றம் செய்து வெளியிட உள்ளனர்.
தற்போது சர்கார் திரைப்படத்தின் தெலுங்கு வெர்ஷனுக்கான வேலைகளில் ஏஆர்.ரஹ்மான் ஈடுபட்டுள்ளார். தமிழ...
