Sunday, September 8
Shadow

Tag: #sasikumar #thanya #kovaisarala #rohini #sangilimurugan

பலே வெள்ளையத்தேவா’ படம் வரும் டிசம்பர் 23-ம் தேதி வெளிவருகிறது..!

பலே வெள்ளையத்தேவா’ படம் வரும் டிசம்பர் 23-ம் தேதி வெளிவருகிறது..!

Latest News
சசிகுமார் நடிப்பில் ‘கிடாரி’ படம் இந்தாண்டு செப்டம்பர் 2-ம் தேதியன்று வெளியானது. செப்டம்பர் 16-ம் தேதி தனது புதிய படத்தைத் துவக்குவதாக அறிவித்தார் சசிகுமார். இதோ இப்போது டிசம்பர் 23-ம் தேதி அந்த புதிய படத்தை வெளியிடுவதாகவும் அறிவித்து திரைக்கும் கொண்டு வந்துவிட்டார். எல்லாம் புயல் வேகம்தான்..! தன்னுடைய கம்பெனி புரொடக்ஷன்ஸ் சார்பிலேயே ‘பலே வெள்ளையத்தேவா’ என்கிற புதிய படத்தை மிக குறுகிய கால தயாரிப்பாக வெறும் 50 நாட்கள் ஷூட்டிங் மற்றும் போஸ்ட் புரொடெக்சன்ஸ் 25 நாட்கள் என்று 75 நாட்களில் மொத்தப் படத்தையும் முடித்துவிட்டார் சசிகுமா இந்தப் படத்தில் சசிகுமார் ஹீரோவாக நடிக்க ஹீரோயினாக மறைந்த பழம்பெரும் நடிகரான ரவிச்சந்திரனின் பேத்தி தான்யா அறிமுகமாகியிருக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் சங்கிலி முருகன், கோவை சரளா, ரோகிணி, பாலாசிங் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். கலை இயக்கம் – மாயபாண்டி, ...