Monday, December 9
Shadow

Tag: #sathuraadi3500 #nikkil #iniya #raguman #msbhaskar

சதுரஅடி 3500 – திரைவிமர்சனம்

சதுரஅடி 3500 – திரைவிமர்சனம்

Review
நிலமோசடி மாபியா பின்னணியில் சொல்லப்பட்டுள்ள சஸ்பென்ஸ் திரில்லர் படமே ’சதுரஅடி 3500’. இந்த படத்தில் புதுமுக நாயகனாக நிகில், ரகுமான், ஆகாஷ், எம்.எஸ்.பாஸ்கர், கோவை சரளா இவர்களுடன் இனியா மற்றும் பலர் நடிக்க ஜாய்சன் இயக்கத்தில் கணேஷ் ராகவேந்திரா இசையில் ரைட் வியூ சினிமாஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் "சதுரஅடி 3500" பெரிய பில்டராக வேண்டும் என்ற கனவோடு, தனது முதல் அடுக்குமாடி கட்டடத்தை கட்டும் ஆகாஷ், நிலமோசடி மாபியாக்களால் மிரட்டப்பட்டு கொலை செய்யப்படுகிறார். உயிரிழந்த ஆகாஷ் ஆவியாக தான் கட்டிக்கொண்டிருந்த கட்டத்தில் சுற்றுவதாகவும், அவரை பலர் அங்கு பார்த்ததாகவும் கூற, இந்த விவகாரம் போலீஸுக்கு வருகிறது. இந்த கேசை கையில் எடுக்கும் ஹீரோ நிகில், ஆகாஷ் பேயாக சுற்றுவது வெறும் வதந்திதான், அவர் உயிருடன் இருப்பதாக நம்புவதோடு, அவரை தேடி அலைகிறார். இதற்கிடையே இனியாவை ஆகாஷ் ஆவி சிறைபிடிக்க, ...