கட்டிப்பிடிக்க கத்துக்கொடுத்த ரம்யா நம்பீசன் புதுமுகம் சித்தார்த்தா சங்கர்
சமீபத்தில் வெளிவந்து ஓடிக் கொண்டிருக்கும் படம் சத்யா. இந்த படத்தில் சிபி ராஜிற்கு வில்லனாகா வந்து மிரட்டல் கொடுக்கும் சித்தார்த்தா சங்கர் நடிப்புக்கு ஏகப்பட்ட ரெஸ்பான்ஸ். இவர் நடிப்பின் மீது உள்ள ஆசையால் டாக்டர் படிப்பை பாதியில் விட்டு வந்திருக்கிறார். இந்த அனுபவம் குரித்து சித்தார் சங்கரிடம் கேட்டபோது..
நான் மலேசியாவில் பொறந்து வளர்ந்தவன். அப்பா வேலூர் அம்மா மலேசியா அங்கேயே டாக்டருக்கு படித்துக்கொண்டிருந்தேன். எனக்கு நடிக்க ஆசை ஆனால் அம்மா ரொம்பவும் கண்டிப்பாக படிப்புதன் முக்கியம் என்று சொல்லி விட்டார்கள். ஆனாலும் பிடிவாதமாக நடிக்க வந்து விட்டேன். வந்ததும் நாசர் சரிடம் முறையாக நடிப்பை கத்துக்கிட்டேன். நான் போகும் ஜிம்முக்கு விஜய் ஆண்டனி வருவார். அவரிடம் வாய்ப்பு கேட்டு வைத்திருந்தேன். சைத்தான் படத்தில் நடிக்க வைத்தார். படத்துக்காக மொட்டை அடித்தேன். அந்த படத்தைப்பார்த்து விட்டு எனக்க...
