தம்பி கார்த்தி படத்துக்கு அண்ணன் சூர்யா வைத்த ஆப்பு
தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் பணிகளை முடிந்துவிட்டு, பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கினார் கார்த்தி. சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு 'கடைக்குட்டி சிங்கம்' என தலைப்பு வைக்கப்பட்டது.
சாயிஷா சைகல், சத்யராஜ், சூரி, ஸ்ரீமன், ப்ரியா பவானி சங்கர், பானுப்ரியா, மௌனிகா உள்ளிட்ட பலர் கார்த்தியுடன் நடித்து வருகிறார்கள். இதன் பெரும்பகுதி படப்பிடிப்பை முடித்துவிட்டது படக்குழு. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, இமான் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இடம்பெற்றுள்ள 'பயிர் செய்ய விரும்பு' என்ற வாசகம் சமூக வலைதளத்தில் வரவேற்பைப் பெற்றது. இறுதிக்கட்டப் படப்பிடிப்பை முடித்து ஏப்ரலில் வெளியிட படக்குழு முடிவு செய்தது.
இந்நிலையில் 'கடைக்குட்டி சிங்கம்' படப்பிடிப்பைக் காண தன் மகன் தேவ் உடன் வந்த சூர்யா, ரேக்ளா ரேஸ் பந்...
