Saturday, September 24
Shadow

Tag: screen

பல ஆண்டுகளுக்கு பிறகு பிரபல நடிகருடன் ஜோடி சேரும் நடிகை

Latest News, Top Highlights
தேசிய விருது பெற்ற பரதநாட்டிய கலைஞரும், தமிழ் சினிமாவில் மிகவும் பெயர் பெற்ற நடிகைகளில் ஒருவருமான நடிகை ஷோபனா ஜோடி நம்பர் சீசன் 4 ல் கலந்துகொண்டார். கடந்த 2014 ல் தமிழில் கோச்சடையான் படத்தில் கடைசியாக நடித்திருந்தார். தற்போது முழுநேர பரதக்கலை ஆசிரியராக மாறிவிட்டார். திருமணம் செய்துகொள்ளாமலேயே பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். மலையாள படங்களில் நடித்த ஷோபனா, பிரபல இயக்குனர் சத்யன் அந்திக்காடு மகன் அனூப் தற்போது இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் ஷோபனா நடிக்க உள்ளார். இப்படத்தில் ஹீரோவாக பிரபல நடிகர் சுரேஷ் கோபி நடிக்கிறார். கடந்த 2005ல் மகளுக்கு என்ற படத்தில் இவர்கள் இருவரும் ஜோடியாக இணைந்து நடித்த பிறகு 15 வருடங்கள் கழித்து மீண்டும் இணைய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது....
சீனாவில் திரையிடப்பட உள்ள “பரியேறும் பெருமாள்”

சீனாவில் திரையிடப்பட உள்ள “பரியேறும் பெருமாள்”

Latest News, Top Highlights
சீனாவில் தற்போது நடந்து வரும் ஹைனன் தீவு சர்வதேச திரைப்பட திருவிழாவான ஸ்பிரிங் ஸ்கிரினிங்-னின் ஒரு பகுதியாக ஹைனன் தீவில் உள்ள ஐந்து நகரங்களில் கதிர், ஆனந்தி நடிப்பில், வெளியான பரியேறும் பெருமாள் படத்தை திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது.  கதிர் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ஆனந்தி நடித்திருந்தார். தவிர, யோகிபாபு, லிஜீஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் இந்தப் படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தப் படத்திற்காக பல இடங்களில் 2018 -ம் ஆண்டின் சிறந்த இயக்குநர் விருதைப் பெற்றார், மாரி செல்வராஜ். இந்தப்படம் இப்பொழுது கன்னடத்தில் ரீமேக் செய்யப்படவுள்ளது என்பது கூடுதல் தகவல். ...