Sunday, June 21
Shadow

பல ஆண்டுகளுக்கு பிறகு பிரபல நடிகருடன் ஜோடி சேரும் நடிகை

தேசிய விருது பெற்ற பரதநாட்டிய கலைஞரும், தமிழ் சினிமாவில் மிகவும் பெயர் பெற்ற நடிகைகளில் ஒருவருமான நடிகை ஷோபனா ஜோடி நம்பர் சீசன் 4 ல் கலந்துகொண்டார். கடந்த 2014 ல் தமிழில் கோச்சடையான் படத்தில் கடைசியாக நடித்திருந்தார். தற்போது முழுநேர பரதக்கலை ஆசிரியராக மாறிவிட்டார். திருமணம் செய்துகொள்ளாமலேயே பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

மலையாள படங்களில் நடித்த ஷோபனா, பிரபல இயக்குனர் சத்யன் அந்திக்காடு மகன் அனூப் தற்போது இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் ஷோபனா நடிக்க உள்ளார். இப்படத்தில் ஹீரோவாக பிரபல நடிகர் சுரேஷ் கோபி நடிக்கிறார். கடந்த 2005ல் மகளுக்கு என்ற படத்தில் இவர்கள் இருவரும் ஜோடியாக இணைந்து நடித்த பிறகு 15 வருடங்கள் கழித்து மீண்டும் இணைய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.