செஞ்சிட்டாலே என் காதல – திரைவிமர்சனம் ( பெண்கள் முகத்திரை )
தமிழ் சினிமாவில் பேய்கள் காலம் போய் இன்றைய இளம் பெண்கள் அதாவது கல்லூரி பெண்கள் செய்யும் அட்டகாசம் தான் இப்ப ஸ்டைல் என்று கூட சொல்லலாம் தொடர்ந்து இந்த மாதிரியான படங்கள் வருகிறது இப்ப நாம பாக்கபோற படமும் அப்படி தான் இன்றய பெண்கள் பாவப்பட்ட பசங்களை எப்படி மடக்குகிறார்கள் எப்படி அவர்களை அழ வைக்கிறார்கள் என்பதை படம் பிடித்து காட்டும் படம் தான் செஞ்சிட்டாலே என் காதல
இந்த படம் முழுக்க முழுக்க புதுமுகங்களால் எடுக்கப்பட்ட படம் என்றாலும் சில முகங்கள் நாம் டிவியில் பார்த்தவர்கள் தான் இந்த படத்தில் நாயகனாக எழில் துரை மதுமிலா அபிநயா கயல்வின்சென்ட் ராகவ் உமா ஸ்ரீனிவாசன் வனிதா மெட்ராஸ் ரமா மைம் கோபி மகாநதி ஷங்கர் மற்றும் பலர் நடிப்பில் மனிஷ் ஒளிப்பதிவில் ராஜ் பரத் இசையில் எழில் துரை இயக்கி நாயகனாகவும் நடித்துள்ளார் .
நாயகன் எழில் துரை கல்லூரியில் படித்து வருகிறார். வழக்கறிஞரான தந்தை அஜய் ரத்னம், தா...
