300-வது படத்தில் புதிய பரிமாணம் காட்டும் யோகி பாபு… ஜூலை 17-ல் வரும் “அர்ஜுனன் பேர் பத்து” மீது அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!
300-வது படத்தில் புதிய பரிமாணம் காட்டும் யோகி பாபு... ஜூலை 17-ல் வரும் “அர்ஜுனன் பேர் பத்து” மீது அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கியுள்ள நடிகர் யோகி பாபு, தனது 300-வது திரைப்படமாக “அர்ஜுனன் பேர் பத்து” படத்தின் மூலம் ரசிகர்களை சந்திக்கத் தயாராகியுள்ளார். Dhev Cinemas Pvt Ltd நிறுவனம் சார்பில் கிருத்திகா தங்கப்பாண்டி.S மற்றும் தங்கப்பாண்டி.D தயாரித்துள்ள இந்த திரைப்படம், ஜூலை 17-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
பொதுவாக நகைச்சுவை கதாபாத்திரங்களில் ரசிகர்களை கவர்ந்த யோகி பாபு, இந்தப் படத்தில் முற்றிலும் மாறுபட்ட உணர்வுப்பூர்வமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பது ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்துள்ளது. அவரது 300-வது திரைப்படம் என்பதாலேயே இந்தப் படத்திற்கு சிறப்பு கவனம் கிடைத்துள்ளது.
ஒரு சாதாரண நடுத்தர வர்க்க இளைஞன...
