
300-வது படத்தில் புதிய பரிமாணம் காட்டும் யோகி பாபு… ஜூலை 17-ல் வரும் “அர்ஜுனன் பேர் பத்து” மீது அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கியுள்ள நடிகர் யோகி பாபு, தனது 300-வது திரைப்படமாக “அர்ஜுனன் பேர் பத்து” படத்தின் மூலம் ரசிகர்களை சந்திக்கத் தயாராகியுள்ளார். Dhev Cinemas Pvt Ltd நிறுவனம் சார்பில் கிருத்திகா தங்கப்பாண்டி.S மற்றும் தங்கப்பாண்டி.D தயாரித்துள்ள இந்த திரைப்படம், ஜூலை 17-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
பொதுவாக நகைச்சுவை கதாபாத்திரங்களில் ரசிகர்களை கவர்ந்த யோகி பாபு, இந்தப் படத்தில் முற்றிலும் மாறுபட்ட உணர்வுப்பூர்வமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பது ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்துள்ளது. அவரது 300-வது திரைப்படம் என்பதாலேயே இந்தப் படத்திற்கு சிறப்பு கவனம் கிடைத்துள்ளது.
ஒரு சாதாரண நடுத்தர வர்க்க இளைஞனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், அவரது உழைப்பின் பலனாக வாங்கிய வாகனம் திருடப்பட்ட பிறகு நிகழும் எதிர்பாராத சம்பவங்களை சுவாரஸ்யமாக எடுத்துரைக்கிறது. ஒரு வாகனத்திற்கு பலர் உரிமை கோரும் சூழ்நிலை எவ்வாறு பரபரப்பான திரைக்கதையாக மாறுகிறது என்பதே படத்தின் முக்கிய அம்சமாகும்.
வாகனத் திருட்டு மாஃபியாவை பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம், நகைச்சுவை, உணர்ச்சி, சமூக நிஜங்கள் மற்றும் விறுவிறுப்பான கமர்ஷியல் அம்சங்களை ஒருங்கிணைத்துப் பேசுகிறது. இதனால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் படமாக இருக்கும் என்ற நம்பிக்கை படக்குழுவினரிடம் காணப்படுகிறது.
“மேற்குத் தொடர்ச்சி மலை” திரைப்படத்தின் இயக்குநர் லெனின் பாரதியிடம் இணை இயக்குநராக பணியாற்றிய ரா. ராஜ்மோகன், இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். அவரின் முதல் முயற்சியே சமூக பின்னணியுடன் கூடிய கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
நாயகியாக அனாமிகா மஹி அறிமுகமாகும் இப்படத்தில் காளி வெங்கட், அருள்தாஸ், மதன் தட்சணாமூர்த்தி, சுப்ரமணியம் சிவா, மைனா நந்தினி, M. சௌந்தர்யா சரவணன், சென்ட்ராயன், ஹலோ கந்தசாமி, பவா லட்சுமண் மற்றும் ரஞ்சன் குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்குநர் லெனின் பாரதியும் குறிப்பிடத்தக்க வேடத்தில் தோன்றியுள்ளார்.
இசையமைப்பாளர் டி. இமான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை மு. காசிவிஸ்வநாதன் கவனித்துள்ள நிலையில், கலை இயக்கத்தை பி. சேகர் மேற்கொண்டுள்ளார். சண்டைக் காட்சிகளுக்கு ஓம் பிரகாஷ் வடிவமைத்துள்ளார்.
ஏற்கனவே வெளியான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், யோகி பாபுவின் 300-வது திரைப்படம் என்ற பெருமையுடன் “அர்ஜுனன் பேர் பத்து” ஜூலை 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அவரது திரைப்பயணத்தில் இந்த படம் மற்றொரு முக்கிய அத்தியாயமாக அமையுமா என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

Yogi Babu’s 300th Film “Arjunan Per Pathu” Set for Worldwide Theatrical Release on July 17
Actor Yogi Babu, who has carved a unique niche for himself in Tamil cinema, is all set to meet audiences with his milestone 300th film, Arjunan Per Pathu. Produced by Krithika Thangapandi S and Thangapandi D under the banner of Dhev Cinemas Pvt Ltd, the film is scheduled for a worldwide theatrical release on July 17.
Known predominantly for his comic roles, Yogi Babu will be seen in a completely different, emotionally driven character in this film, raising expectations among fans and moviegoers alike. The fact that it marks his 300th outing in cinema has added to the excitement surrounding the project.
The story revolves around a middle-class young man who works hard to buy a vehicle in the hope of improving his life. However, when the vehicle is stolen, a series of unexpected events unfolds as multiple people begin claiming ownership of it. The film presents this intriguing premise through an engaging blend of drama, emotion, and commercial entertainment.
Set against the backdrop of a vehicle theft mafia, Arjunan Per Pathu combines humor, emotional depth, social realities, and gripping commercial elements. The makers believe the film will appeal to audiences across different demographics.
The film marks the directorial debut of Ra. Rajmohan, who previously worked as an associate director with filmmaker Lenin Bharathi on the critically acclaimed Merku Thodarchi Malai. His first directorial venture promises to deliver a socially rooted story wrapped in an entertaining cinematic package.
Introducing Anamika Mahi as the female lead, the film also features Kaali Venkat, Aruldoss, Madan Dakshinamurthy, Subramaniam Siva, Mynaa Nandhini, M. Soundarya Saravanan, Sentrayan, Hello Kandasamy, Bava Lakshman, and Ranjan Kumar in pivotal roles. Director Lenin Bharathi himself appears in an important role.
The film’s music is composed by D. Imman, while cinematography is handled by Pradeep Kaliraja. Editing has been done by Mu. Kasi Viswanathan, art direction by P. Sekar, and action choreography by Om Prakash.
With its first-look poster and teaser already receiving a positive response from audiences, Arjunan Per Pathu is gearing up for its grand theatrical release on July 17. As Yogi Babu reaches a significant milestone in his cinematic journey, fans are eagerly waiting to see whether this film will become another memorable chapter in his career.
