ராஜஸ்தான் ராயல்ஸ் உரிமையாளரும், நடிகையுமான ஷில்பா ஷெட்டி பிறந்த தினம்
இவர் பாஜிகர் (1993) திரைப்படத்தில் அறிமுகமானதிலிருந்து பாலிவுட், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்கள் அனைத்தையும் சேர்த்து அவர் 40 திரைப்படங்களை நெருங்கிவிட்டார்.
1994 ஆம் ஆண்டில் வெளிவந்த ஆக் திரைப்படத்தில் முக்கியப் பாத்திரத்தில் அவர் நடித்தார். ஷில்பா தனது நடிப்புத் தொழிலில் இருந்து பலமுறை புறக்கணிக்கப்பட்டாலும் தன் திறமையை மீண்டும் மீண்டும் நிரூபித்தார். தத்கன் (2000) மற்றும் ரிஷ்தே (2002) ஆகிய திரைப்படங்களில் அவருடைய பாத்திரங்கள் பாராட்டப்பட்டன.
பிர் மிலேங்கே (2004) திரைப்படத்தில் அவர் எயிட்ஸ் நோயாளியாக நடித்ததற்காக பல விருதுகளைப் பெற்றார். அவரது இளைய சகோதரி ஷமிதா ஷெட்டியும் ஒரு பாலிவுட் திரைப்பட நடிகை ஆவார். இந்த ஆண்டு அவர் நடித்த லைஃப் இன் எ... மெட்ரோ மற்றும் அப்னே ஆகிய இரு திரைப்படங்களும் வெற்றி பெற்றன. லைஃப் இன் எ... மெட்ரோவில் அவரது நடிப்பு சிறப்பாக விமர்சிக்கப்பட்டத...
