சிவராஜ்குமார் – அபிஷன் ஜீவிந்த் கூட்டணியுடன் தமிழ் சினிமாவில் களமிறங்கும் ‘டிராமா கம்பெனி’!
சிவராஜ்குமார் – அபிஷன் ஜீவிந்த் கூட்டணியுடன் தமிழ் சினிமாவில் களமிறங்கும் ‘டிராமா கம்பெனி’!
தமிழ் சினிமாவில் தரமான பொழுதுபோக்கு படங்களை வழங்கும் புதிய தயாரிப்பு நிறுவனங்களுக்கான வரவேற்பு எப்போதும் இருந்து வருகிறது. அந்த வரிசையில், தயாரிப்பாளர் பாலமுருகன்.அ தலைமையில் உருவாகியுள்ள ‘டிராமா கம்பெனி’ நிறுவனம் தனது முதல் திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் தடம் பதிக்கத் தயாராகியுள்ளது.
இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தின் முக்கிய சிறப்பம்சமாக, கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திரமான டாக்டர் சிவராஜ்குமார் மற்றும் சமீபத்தில் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ வெற்றியின் மூலம் கவனம் ஈர்த்த அபிஷன் ஜீவிந்த் இணைந்து நடிப்பது அமைந்துள்ளது. தலைமுறை வித்தியாசம் கொண்ட இரு நடிகர்கள் ஒரே படத்தில் இணைவது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் படத்தின் மூலம் கௌதம் சிவராமன் இயக்குநராக அறிமுகமாகி...
