ஏழை மற்றும் தெருவோர குழந்தைகள் மீது அக்கறை எடுக்கும் ஸ்ரீ தயா பவுண்டேஷன்
குழந்தைகள் நலம் மற்றும் தெருவோர குழந்தைகளை பாதுகாக்கும் அமைப்பான ஸ்ரீ தயா பவுண்டேஷன் அமைப்பின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைப்பெற்றது.
இன்றைய காலக்கட்டத்தில் குழந்தைகளின் பாதுகாப்பு நம் இந்திய நாட்டில் மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. இதைப்பற்றிய ஒரு விழிப்புணர்வு பேரணி சமீபத்தில் நாடு தழுவிய அளவில் பாரத் யாத்ரா என்ற பெயரில் நடைபெற்றது. சென்னையில் பாரத் யாத்ரா விழிப்புணர்வு பேரணியை ஸ்ரீ தயா பவுண்டேஷன் சார்பில் திருமதி. லதா ரஜினிகாந்த் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இன்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஸ்ரீ தயா பவுண்டேஷன் எதற்காக ? அதன் நோக்கம் என்ன ? அது எவ்வாறு செயல்படுகிறது என்பதை அதன் நிறுவனர் திருமதி. லதா ரஜினிகாந்த் அவர்கள் எடுத்துரைத்தார். ஒரு நல்ல நோக்கத்திற்காக, சமுதாய விழிப்புணர்வுக்காக நடைபெறும் இந்த முயற்சியில் ஸ்ரீ தயா பவுண்டேஷன் நிறுவனம் ...
