சிம்புவுக்கு கோர்ட் எச்சரிக்கை ஜப்தி நடவடிக்கை தேதி அறிவிப்பு
கடந்த சில நாட்களாக சிம்புவை பற்றி நல்ல செய்திகளாகவே வந்துகொண்டு இருந்தது தொடர்ந்து படங்கள் வெற்றி என்று சந்தோசத்தில் இருந்த சிம்புவுக்கு மீண்டும் ஒரு பெரிய இடி ஆம் நீண்ட நாளுள்ளு முன் நடந்த ஒரு விவகாரம் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்துள்ளது .
நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது தான் ஒரு வெற்றியை ருசித்துள்ளார் நடிகர் சிம்பு. மணிரத்னம் இயக்கத்தில் அவரும் நடித்திருந்த செக்கச் சிவந்த வானம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது சுந்தர் சியின் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 2013-ம் ஆண்டு, பேஷன் மூவி மேக்கர்ஸ் என்று நிறுவனம், சிம்புவை வைத்து அரசன் என்ற படத்தை எடுக்க ஒப்பந்தம் செய்து, ரூ.50 லட்சம் பணத்தை அட்வான்ஸாக கொடுத்தது. சிம்பு இதுநாள்வரை இப்படத்திற்கு கால்ஷீட் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து, தனக்கு சேர வேண்டிய படத்தை வட்டியுடன் திருப்பி தர வேண்டும் என சென்னை ஐகோர்ட...