திடீர் திருப்பம்… தனுஷ் இடத்தை பிடித்த சிம்பு…
வெற்றிமாறன் இயக்கும் 'வட சென்னை', கௌதம்மேனன் இயக்கும் 'எனை நோக்கி பாயும் தோட்டா', பாலாஜி மோகன் இயக்கும் 'மாரி-2' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் தனுஷ். அதோடு அவரது நடிப்பில், 'The Extraordinary Journey of Fakir' என்ற இங்கிலீஷ் படமும் உருவாகி வருகிறது.
இந்தப்படங்கள் எல்லாம் அடுத்தடுத்து வெளியாகவிருக்கின்றன. இந்நிலையில் தெலுங்கில் சூப்பர் ஹிட்டான 'நீடி நாடி ஒகே கதா' என்ற படத்தின் தமிழ் ரீ-மேக்கில் தனுஷ் நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் கடந்த சில தினங்களாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதோடு தாணு இந்தப்படத்தை தயாரிப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால் இதை தாணு மறுத்துள்ளார்.
லேட்டஸ்ட்... தகவல்... இந்தப்படத்தை ஸ்கெட்ச் பட இயக்குநர் விஜய்சந்தர் இயக்க திட்டமிட்டுள்ளாராம். ஹீரோ சாய்ஸில் முதலிடத்தில் இருப்பவர் சிம்பு என தகவல் வெளியாகி உள்ளது....
