ஜல்லிக்கட்டை எதிர்க்கிறீங்களே? வெட்கமா இல்லையாடா? : கொந்தளித்த சிம்பு
பொங்கலுக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் ஜல்லிக்கட்டு விவகாரம் தமிழகம் முழுவதும் சூடு பிடித்துள்ளது.
குறிப்பாக திரையுலகில் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு ஆதரவு தெரிவித்து முதலில் குரல் கொடுத்தவர் நடிகர் சிம்பு.
தன்னுடைய ஆதரவை மேலும் கூடுதலாக்கும் விதமாக இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த போது நாளை ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு ஆதரவு தெரிவித்து வித்தியாசமான போராட்டத்தை அறிவித்தார்.
இதுகுறித்து அவர் இன்று பேசியதாவது :
என் அப்பாவும், அம்மாவும் என்னை தமிழைப்படி, தமிழைப்படி என்று சொல்லி சொல்லி வளர்த்தார்கள். தமிழ்ப்பால் ஊட்டி வளர்த்தார்கள். அதன் அருமையை நான் உணர்ந்தவன். அப்படிப்பட்ட தமிழை தாய்மொழியாக கொண்டதில் நான் மிகப்பெரிய பெருமை அடைகிறேன். இதுதான் என் வீடு, என் நாடு. தமிழ்தான் எனக்கு எல்லாமுமே. நான் முதலில் தமிழன், பிறகு தான் இந்தியன். என்னை இந்த அளவுக்கு வளர்த்தது தமிழ். எனக்க...
