றெக்க படத்தை இயக்கிய ரத்தின சிவா இயக்கத்தில் சிம்பு
றெக்க பட இயக்குனர் ரத்தின சிவாவின் படத்தில் சிம்பு நடிக்கப் போவதாக கூறப்படுகிறது. விஜய் சேதுபதியை வைத்து றெக்க படத்தை இயக்கிய ரத்தின சிவா சிம்புவை சந்தித்து பேசியுள்ளார். இதையடுத்து சிவா சிம்புவை வைத்து படம் எடுக்கப் போவதாக சமூக வலைதளங்களில் பேச்சாக கிடக்கிறது. இதை பார்த்த சிவா விளக்கம் அளித்துள்ளார்.
அண்ணனுக்காக காத்திருக்கிறேன். நட்பு ரீதியாக எஸ்டிஆரை சந்தித்து பேசினேன். என் தலைவனுடன் சேர்ந்து பணியாற்ற காத்திருக்கிறேன் என்று ரத்தின சிவா தெரிவித்துள்ளார்.
அஅஅ படம் வெளியான பிறகு சிம்பு மீது இயக்குனரும், தயாரிப்பாளரும் புகார் தெரிவித்தனர். சிம்பு பாத்ரூமில் இருந்து கொண்டு டப்பிங் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் தற்போது அவர் அப்படியே ஆளே மாறிவிட்டார்
மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடிக்கும் சிம்பு படக்குழுவை வியக்க வைத்துள்ளார். வழக்கமாக லேட்டாக ஷூட்டிங் வரும் சி...
