ஜீவாவின் “கீ” பட இசை வெளியீட்டு விழாவில் சிம்புவால் ஏற்பட்ட சலசலப்பு
காலீஸ் இயக்கத்தில் ஜீவா, நிக்கி கல்ராணி, ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கீ'. மைக்கேல் ராயப்பன் தயாரித்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது. தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், விஜய் சேதுபதி, தயாரிப்பாளர் தேனப்பன் உள்ளிட்ட பலர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் தயாரிப்பாளர் தேனப்பன் பேசும் போது, " 'வல்லவன்' படத்தை சிம்புவை இயக்குநராக வைத்து எடுத்தேன். அதனால் ஏற்பட்ட பிரச்சினை எவ்வளவு என்பது எனக்குதான் தெரியும். ஆனால், நான் புகார் அளிக்கவில்லை. அதற்குப் பிறகு எனக்கிருக்கும் பழக்கவழக்கங்களை வைத்து எழுந்து, தற்போது மம்மூட்டியை வைத்து படம் எடுத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், தயாரிப்பாளர் மைக்கேல் ராய்ப்பனை பற்றி பலரும் புகழ்ந்து பேசினார். இதன் மூலம் அவருடைய நேர்மை தெரிகிறது. அவர் சிம்பு மீது புகார் அளித்திருக்கும் நிலைய...
