6 நாயகன் 6 நாயகிகளுடன் களம் இறங்கும் இயக்குனர் சிம்புதேவன்
23 ஆம் புலிகேசி திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக 24 ஆம் புலிகேசி எடுக்கும் வேலையில் இறங்கினார் சிம்புதேவன். ஆனால் சில காரணங்களால் படப்பிடிப்பு பாதியில் நின்றுபோனது.
தற்போது வெங்கட் பிரபுவின் பிளாக் டிக்கெட் புரொடக்ஷன் தயாரிக்கும் படத்தை இயக்குகிறார். ஆரம்ப கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், இப்படத்தில் ஆறு கதாநாயகர்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் வெங்கட் பிரபு அன்ட் கோ நடிகர்களான ஜெய், சிவா, பிரேம்ஜி மற்றும் வைபவ் நடிக்க உள்ளனர். பிக்பாஸ் போட்டியாளரான விஜயலட்சுமியும் நடிக்கிறார்.
இப்படத்தில் ஆறு கதாநாயகர்கள் எனவும், ஆறு கதைகள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆறு பேருக்கும் இருக்கும் தனித் தனிக் கதைகள் ஒரு புள்ளியில் இணையும் வண்ணம் படம் இருக்குமாம்.
சிவா, ஜெய், வைபவ் உறுதியாகிவிட்ட நிலையில் மற்ற மூன்று கதாநாயகர்கள் யார் என்பதை விரைவில் அறிவிக்க உள்ளனர். ஆறு ஹ...