“40 ஆண்டுகள் காத்திருந்த கனவு நனவானதா?” – ‘சிங் கீதம்’ முன்வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன்
“40 ஆண்டுகள் காத்திருந்த கனவு நனவானதா?” – ‘சிங் கீதம்’ முன்வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் எழுப்பிய உணர்ச்சி கேள்வி!
சென்னை, ஜூன் 8
ஒரு திரைப்படம் வெளியாகும் முன்பே அது பற்றிய பேச்சுக்கள் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்குவது அரிது. ஆனால், இயக்குநர் சிங்கிதம் சீனிவாச ராவ் தனது நாற்பது ஆண்டுகால கனவாக உருவாக்கியுள்ள ‘சிங் கீதம்’ திரைப்படம் அந்த அரிய இடத்தைப் பெற்றுள்ளது. ஜூன் 11ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள இப்படத்தின் முன்வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த விழாவின் முக்கிய ஈர்ப்பாக கலந்துகொண்ட உலகநாயகன் கமல்ஹாசன், சிங்கிதம் சீனிவாச ராவுடன் தன்னுடைய பல தசாப்தங்களைக் கடந்து வந்த நட்பையும் படைப்புப் பயணத்தையும் நினைவுகூர்ந்தார்.
“எனக்கு இருபது வயதாக இருந்தபோது சிங்கிதம் சார் இரண்டு கதைகளைச் சொன்னார். அதில் ஒன்று ‘புஷ்பக விமானம்’ ஆனது. மற்றொரு கதை...
