
சிவகார்த்திகேயன் விஷயத்தில் கவனமாக இருப்பேன்- நடிகர் சூரி
'மனம் கொத்தி பறவை', 'கேடி பில்லா கில்லாடி ரங்கா', 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்' உள்ளிட்ட பல படங்களில் சிவகார்த்திகேயனோடு இணைந்து நடித்தவர் சூரி. விரைவில் பொன்.ராம் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்திலும் சிவகார்த்திகேயனோடு நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சூரி. இதன் படப்பிடிப்பு விரைவில் தென்காசியில் துவங்கவுள்ளது.
பல்வேறு நாயகர்களோடு நடித்தாலும் சிவகார்த்திகேயனோடு நடிக்கும் போது மட்டும் கவனத்தோடு இருப்பேன் என்று சூரி தெரிவித்துள்ளார். சிவகார்த்திகேயன் குறித்து, "சில நடிகர்கள் படப்பிடிப்பு தளத்தில் இயல்பாக பேசிக் கொண்டே இருப்பார்கள். கேமிரா முன்னால் வேறு மாதிரியாகி நடிப்பைக் காட்டி, நம்மை தூக்கிச் சாப்பிட்டுவிடுவார்கள். அந்த வகையில் சிவகார்த்திகேயனோடு நடிக்கும் போது மட்டும் ரொம்ப கவனமாக இருப்பேன்.
அவருடன் படப்பிடிப்பு என்றால் காலையில் குளிக்கும் போதே, அன்றைக்கான காட்சிகளை யோசிக...