எனக்கு சூப்பர்ஸ்டார் பட்டம் தேவையில்லை நான் நானாக இருக்க விரும்புகிறேன் – சிவகார்த்திகேயன்
நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி நாயகனாக நடிக்கும் 'அதாகப்பட்டது மகாஜனங்களே' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. சிவகார்த்திகேயன் சிறந்த விருந்தினராக கலந்து கொண்டு ட்ரெய்லரை வெளியிட்டார்.
இவ்விழாவில் பேசிய தயாரிப்பாளரும், நடிகர் விஜயின் முன்னாள் பிஆர்ஓ-வான பி.டி.செல்வகுமார் தன்னுடைய பேச்சில் சிவகார்த்திகேயனை ‘இளம் சூப்பர் ஸ்டார்’ என்று குறிப்பிட்டார். இயக்குநர் பேரரசு பேசும் போது சிவகார்த்திகேயனை ‘மக்கள் ஸ்டார்’ என்று குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன் "நிறைய படங்களில் தவறவிட்டது 'வேலைக்காரன்' படத்தில் நடந்துவிட்டது. தம்பி ராமையா சாருடன் நடித்துவிட்டேன். அவர் விடாமுயற்சி எல்லோருக்கும் ஒரு சிறந்த உதாரணம். அவர் வயதை என்றைக்குமே வெளியே காட்டிக் கொள்ளாமல், தன்னை மட்டுமே நம்பிப் போராடி ஜெயித்துக் கொண்டிருக்கிறார். அவருடைய அன்புக்காக மட்டுமே இங்கு வந...
