Wednesday, October 28
Shadow

Tag: #sjsurya #monster #thanks

மான்ஸ்டர் எலியால் மீண்டு வந்து உள்ளேன் எஸ்.ஜே.சூர்யா

மான்ஸ்டர் எலியால் மீண்டு வந்து உள்ளேன் எஸ்.ஜே.சூர்யா

Latest News, Top Highlights
பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ்-ன் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியாகிய ‘மான்ஸ்டர்’ திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பத்திரிகையாளர்களுக்கு தனிப்பட்ட விதமாக நன்றி சொல்ல இன்று பத்திரிகையாளர்களை நேரில் சந்தித்தார். அப்போது எஸ்.ஜே.சூர்யா பேசியதாவது : ‘வாலி‘யில் இயக்குநராக ஆரம்பித்த என் பயணம், ‘மான்ஸ்டர்‘-ல் முற்றுப்புள்ளி அல்ல, இந்த பயணம் தொடரும். நான் நல்லது செய்யும்போது பாராட்டி, தவறு செய்யும் போது சுட்டிக்காட்டி என்னை இந்த இடத்திற்கு கொண்டுவந்த பத்திரிகையாளர்களுக்கு பெரும் பங்கு இருக்கிறது. புகழை அனைவருக்கும் சேர்க்க அவர்கள் தவறியதில்லை. அதற்கு ஆதாரம் தான் இப்படத்தின் வெற்றி. இந்த வெற்றியை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன். உதவி இயக்குநராக பணியாற்றிய காலத்தில் ஸ்டுடியோக்களில் நடக்கும் படப்பிடிப்பிற்கு ரூ.50/- கொடுத்து வேடிக்கைப் பார்ப்பே...