சன்பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ” SK 16″ படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது !
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ' மெரினா' , ' கேடி பில்லா கில்லாடி ரங்கா ' ஆகிய படங்களில் நடித்திருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படம் மூலம் இருவரும் மூன்றாவது முறையாக இணைகிறார்கள்.
சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் பதினாறாவது பெயரிடப்படாத இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது எந்திரன்,சர்கார் , பேட்ட ஆகிய பிரமாண்ட படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனமான “சன் பிக்சர்ஸ்” தயாரிக்கும் நான்காவது படம் இது . சன் பிக்ச்சர்ஸ் - சிவகார்த்திகேயன் கூட்டணி முதல் முறையாக இணைகிறார்கள் .
சிவகார்த்திகேயனின் 16 வது படமான இந்த படத்தில் இரண்டு முன்னணி கதாநாயகிகள் நடிக்கிறார்கள் . “துப்பறிவாளன்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை அனு இம்மானுவேல் முதல் முறையாக சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேருகிறார் . இது அவரது இரண்டாவது தமிழ் படம் என்பது குறிப்பிடத...
