சூர்யா நடிப்பில் உருவாகும் சூரரைப்போற்று படத்துக்கு ஹாலிவுட் சண்டை பயிற்சியாளர்கள்
சூர்யா நடிப்பில் வெளியான என்.ஜி.கே. படம் மிக பெரிய தோல்வி படமாக அமைந்தது தயாரிப்பாளருக்கு மிக பெரிய நஷ்டத்தை கொடுத்தது இதற்கு நான் தலை வணங்குகிறேன் என்று சூர்யா சமூக வலைத்தளடத்தில் குறிப்பிட்டு இருந்தார். அடுத்து சூர்யா நடித்து வெளி வர இருக்கும் காப்பான் படம் ரசிகர்களுக்கு நல்ல விருந்து கொடுக்கும் என்று கூறியிருக்கிறார்.
காப்பான் படத்தை முடித்துவிட்ட சூர்யா, அடுத்ததாக இறுதிச்சுற்று புகழ் சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப்போற்று என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக மலையாள நடிகை அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இந்தப்படத்தில் சண்டைக் காட்சிகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து படமாக்க இருக்கிறாராம் சுதா கொங்கரா.
இதற்காக பிரபல ஹாலிவுட் சண்டை பயிற்சியாளர் கிரேக் போவெல் என்பவரை இந்த படத்தின் சண்டைக்காட்சி ஒருங்கிணைப்...
