ஆன்மீக அரசியல் – ரஜினிகாந்த் விளக்கம்
ரஜினி அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்று பல ஆண்டுகளாக, பலரும் எதிர்பார்த்து வந்த நிலையில், 2017-ஆம் ஆண்டின் கடைசி நாளான நேற்று, ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.
முன்னதாக, தனது ரசிகர்கள் முன்பு பேசிய ரஜினி, தான் அரசியலுக்கு வருவது உறுதியென்றும், விரைவில் தனிக்கட்சி தொடங்குவேன் என்றும் கூறினார். மேலும் வருகின்ற சட்டசபை தேர்தலில், தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்றும் ரஜினி அறிவித்தார்.
அதில் குறிப்பாக ஆன்மிக அரசியலில் ஈடுபடுவோம் என்று கூறியிருந்தார். இதுகுறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்தன. மேலும் ரஜினியை பாரதிய ஜனதா கட்சி பின்னிருந்து இயக்குவதாக பலரும் கூறி வந்தார்கள். இந்நிலையில், ஆன்மீக அரசியல் குறித்து ரஜினிகாந்த் விளக்கம் அளித்திருக்கிறார்.
உண்மையான, நேர்மையான, சாதி மதச்சார்பற்ற, நாணயமான, அறவழியில் அரசியல் செய்வது தான் ஆன்மீக ...
