துபாய் ஓட்டலில் நடிகை ஸ்ரீதேவி கொல்லப்பட்டாரா? போனிகபூர் பதில்*
துபாய் ஓட்டலில் உள்ள குளியல் தொட்டியில் நடிகை ஸ்ரீதேவி நீரில் மூழ்கடித்து கொல்லப்பட்டதாக கேரள டிஜிபி ரிஷிராஜ்சிங் சர்ச்சையை கிளப்பி உள்ள நிலையில் ஸ்ரீதேவியின் கணவரும், அஜித்குமாரின் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் தயாரிப்பாளருமான போனிகபூர் மவுனம் கலைத்துள்ளார்.
16 வயதினிலே படத்தில் மயிலாக வலம் வந்து தமிழக ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளை கொண்ட நடிகை ஸ்ரீதேவி, நீண்ட காலமாக இந்தி திரை உலகின் கனவு கன்னியாக வலம் வந்தார்..
ஸ்ரீதேவியின் அழகில் மயங்கிய இந்தி திரை உலகின் முக்கிய தயாரிப்பாளரான போனிகபூர், தனது முதல் மனைவி மோனாவை விவாகரத்து செய்து விட்டு, 1996 ஆண்டு ஸ்ரீதேவியை திருமணம் செய்து கொண்டார். இருவரும் சேர்ந்து பல படங்களை தயாரித்து வந்தனர். இவர்களுக்கு இரு மகள்கள் உள்ள நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ந்தேதி உறவினர் திருமணத்திற்கு குடும்பத்துடன் துபாய் சென்றிருந்த நிலையில் அங்குள்ள நட...
