Monday, June 22
Shadow

Tag: sridevi

இந்திய திரையுலக ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆஸ்கார் விழா

இந்திய திரையுலக ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆஸ்கார் விழா

Latest News, Top Highlights
சினிமாத் துறையின் மிகப்பெரிய கௌரவமாக கருதப்படுவது ஆஸ்கார் விருது. இந்த ஆண்டு 90வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா கலிபோர்னியாவில் உள்ள ஹாலிவுட், டால்பி தியேட்டரில் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. இதில், இந்தியாவைச் சேர்ந்த நடிகர்களுக்கு கௌரவம் செய்யப்பட்டது இந்திய திரையுலக ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அண்மையில் மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காலமான இந்தி நடிகர் சசி கபூர் ஆகியோருக்கும் ஆஸ்கார் விழாவில் மரியாதை செலுத்தப்பட்டது. இது குறித்து இந்தியத் திரை உலகைச் சேர்ந்த பலரும் சமூக வலைத்தளங்களில் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்....
வாழும்போதும் ஸ்ரீதேவி நிம்மதியாக இல்லை – பிரபல இயக்குநர் வருத்தம்

வாழும்போதும் ஸ்ரீதேவி நிம்மதியாக இல்லை – பிரபல இயக்குநர் வருத்தம்

Latest News, Top Highlights
நடிகை ஸ்ரீதேவியின் உடல் இன்று தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில், ஸ்ரீதேவியின் மறைவு குறித்து பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா சமூக வலைதளத்தில் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஸ்ரீதேவி மரணச் செய்தி கேட்டு அதிர்ந்து போனேன். ஒருவரது வாழ்க்கை வெளியில் இருந்து பார்க்க பொறாமைப்படக் கூடியதாக தெரியும். ஆனால் அதன் மறுமுகம் வேதனையாக கூட இருக்கலாம். ஸ்ரீதேவியின் வாழ்க்கை அதற்கு உதாரணம். ஸ்ரீதேவி ஒரு கூண்டுக்கிளி போன்று சுதந்திரம் இல்லாமல் வாழ்ந்தார். தனது வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருந்தது இல்லை. தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த சோகங்கள் அவர் மனதில் காயத்தை ஏற்படுத்தின. அதில் இருந்து அவர் நிம்மதியாகவே இல்லை. கேமிராவுக்கு முன்பு நடிக்கும் போது மட்டுமே ஸ்ரீதேவி நிம்மதியாக இருந்தார். ஸ்ரீதேவியின் வாழ்க்கை அழகானது என்றே பலரும் நினைத்தனர். அழகு முகம், அற்புதமான திறமை, 2 அழகான மகள்களுடன் நல்ல...
இதனால் தான் ஸ்ரீதேவி உயிரிழந்தாரா? வேகமாய் பரவும் தகவல்கள்

இதனால் தான் ஸ்ரீதேவி உயிரிழந்தாரா? வேகமாய் பரவும் தகவல்கள்

Latest News, Top Highlights
திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக துபாய் சென்றிருந்த நடிகை ஸ்ரீதேவி (53) மாரடைப்பால் நேற்று முன்தினம் காலமானார். குறைந்த ரத்த அழுத்தத்தால், ஸ்ரீதேவிக்கு மயக்கம் ஏற்பட்டு மயங்கி விழுந்ததாகவும் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில், நடிகை ஸ்ரீதேவியின் பிரேத பரிசோதனை சான்றிதழ் மற்றும் தடயவியல் அறிக்கை இன்று பிற்பகல் வெளியானது. ஓட்டல் அறையின் குளியல் தொட்டியில் உள்ள தண்ணீரில் மூழ்கியதால் ஸ்ரீதேவியின் உயிர் பிரிந்ததாகவும், அவரது மரணத்தில் சதிச்செயல்கள் ஏதும் இல்லை என்றும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், துபாயின் பிரபல ஊடகங்கள் மாறுபட்ட தகவல்களை வெளியிட்டு வருகின்றன. நடிகை ஸ்ரீதேவி மது போதையில் இருந்தபோது குளியல் தொட்டியில் தடுமாறி விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்து இருக்கலாம் என செய்திகள் பரவி வருகிறது. இந்நிலையில், ஸ்ரீதேவியின் உடல் இன்று இந்தியா கொண்டு வரப்படு...
ஸ்ரீதேவி திடீர் மரணம்! தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் !!.

ஸ்ரீதேவி திடீர் மரணம்! தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் !!.

Latest News, Top Highlights
பிரபல நடிகை ஸ்ரீதேவி (54) நேற்று துபாயில் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளது .அதில் கூறியிருப்பதாவது... " தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினர் நடிகை ஸ்ரீதேவி நேற்று இரவு அகால மரணம் அடைந்தார் என்ற செய்தி அதிர்ச்சியும் மிகுந்த வேதனையும் அளிக்கிறது. இந்திய திரைவானில் தனது ஆளுமையை பல வருடங்களாக நிலை நாட்டியவர் ஸ்ரீதேவி. தனது நான்காம் வயதில் 'துணைவன்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானர் ஸ்ரீதேவி .தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழி திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடத்து வந்த ஸ்ரீதேவி தனது பதிமூன்றாவது வயதில் 'மூன்று முடிச்சு' படத்தின் மூலமாக கதாநாயகியானார் .தொடர்ந்து ஜெயசங்கர், சிவகுமார்,ரவிக்குமார், ரஜினி, கமல் மற்றும் மலையாளம், தெலுங்கு ,கன்னட முன்னணி நடிகர்களின் கதாநாயகியாகவும் உலா வந்தார்....
ஜப்பான் ரசிகர்களையும் கவர்ந்த ஸ்ரீதேவி இன்று மாரடைப்பால் காலமானார்

ஜப்பான் ரசிகர்களையும் கவர்ந்த ஸ்ரீதேவி இன்று மாரடைப்பால் காலமானார்

Latest News, Top Highlights
1963 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13 ஆம் தேதிவிருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ஐயப்பன் -ராஜேஸ்வரி தம்பதிகளுக்கு மகளாக பிறந்தஸ்ரீதேவி தனது நான்கு வயதிலேயே ஏ.பி.நாகராஜன் இயக்கிய கந்தன் கருணை திரைப் படத்தில்குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். 1967ஆம் ஆண்டு வெளியான அப்படம் தெலுங்கு, கன்னடம் மலையாளம் என்று வல்ல தென்னிந்திய மொழிகளிலும் குழந்தைநட்சத்திரமாக நடிக்கிற வாய்ப்பினை இவருக்குப் பெற்றுத் தந்தது. அதைத் தொடர்ந்து பல படங்களில் குழந்தைநட்சத்திரமாக நடித்து வந்த இவரை 1976ஆம்ஆண்டு மூன்று முடிச்சு படம் மூலம்கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர். இவர் அறிமுகமான முதல் படத்திலேயே கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவரும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்தப் படம் வெற்றி படமாக அமையவே இவரது சினிமாவாழ்க்கையில் பெரும் திருப்பம் ஏற்பட்டது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழியிலும...
பெண் கல்வி பற்றி வலியுறுத்தும் படம் .’இலை’

பெண் கல்வி பற்றி வலியுறுத்தும் படம் .’இலை’

Latest News
நம் நாட்டில் எல்லாப் போட்டிகளிலும் ஆண்கள் சாதாரண ஓட்டம் ஓடுகிறார்கள். ஆனால் பெண்கள் தடை தாண்டி ஓட்டம் ஒட வேண்டியிருக்கிறது. இப்படி நம் நாட்டில் பெண்கள் பல்வேறு தடைகளை, இடையூறுகளை , இடர்ப்பாடுகளைத் தாண்டித்தான் எல்லாத் துறைகளி்லும் மேலே வர வேண்டியிருக்கிறது. இப்போதெல்லாம் கல்வி என்றால் பெண்களே எப்போதும் அதிக மதிப்பெண் பெறுவது தொடர்ந்து வருகிறது. ஆனால் அதைச் சாதிக்க அவர்கள் படும்பாடு ,சந்திக்கும் வலிகள் யாருக்கும் தெரிவதில்லை. அப்படி ஒரு பெண் தன் கல்வியில் சாதிக்கத் தடைகளைத் தாண்டி எவ்வளவு போராட்டங்களைச் சந்திக்கிறாள் என்பதைச் சொல்லும் படம் தான் "இலை'. இப்படத்தை பினிஷ் ராஜ் இயக்கியுள்ளார். லீஃப் புரொடக்ஷன்ஸ் இண்டர்நேஷனல் தயாரித்துள்ளது. ஸ்வாதி நாராயணன் நாயகியாக நடித்துள்ளார். எதிர் நாயகனாக சுஜீத் ஸ்டெபானோஸ் நடித்துள்ளார். கன்னட நடிகர் கிங்மோகன் . மலையாள நடிகை ஸ்ரீதேவி , ஷைன் ...