சேலத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ்-ஐ நிறுவிய டி. ஆர். சுந்தரம் பிறந்த நாள் பதிவு
டி.ஆர்.எஸ் தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் சிங்களத் திரைப்படங்களில் தனது பன்முகத் திறனை (நடிப்பு, இயக்கம் மற்றும் திரைப்படத் தயாரிப்பு) வெளிப்படுத்தியவர். தமிழ்நாட்டிலுள்ள சேலத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு அரங்கையும் நிறுவனத்தையும் நிறுவியவர் ஆவார். தமிழ்நாட்டிலுள்ள சேலத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு அரங்கையும் நிறுவனத்தையும் நிறுவியவர் ஆவார்.
1907ஆம் ஆண்டு கோவையில் ஓர் செல்வவளமிக்க துணி வியாபாரிக்கு மகனாகப் பிறந்து தனது படிப்பை இந்தியாவில் துவங்கி இங்கிலாந்தின் லீட்சில் துகிலியல் தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்றார். இந்தியா திரும்பிய பின்னர் தமது குடும்பத் தொழிலை மேற்பார்வையிட்டு வந்தார்.
1931ஆம் ஆண்டில் வெளியான காளிதாஸ் என்ற முதல் பேசும் திரைப்படத்தை அடுத்து திரைப்படத்துறை முதலீடு இலாபகரமாக இருந்தது. எஸ். எஸ் வேலாயுதம...
