வி சி வடிவுடையான் இயக்கத்தில் சன்னி லியோன் நடிக்கும் சரித்திர படம்
உலகம் முழுவதும் பிரபலமான ஒரு புகழ்பெற்ற பிரபலம் தான் சன்னி லியோன். பல ஆங்கில படங்களில் நடித்து புகழ் பெற்றவர். தொடர்ச்சியாக பல இந்தி படங்களில் நடித்து வந்த அவர், முதன் முறையாக ஒரு நேரடி தமிழ் படத்தின் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பிரபல கமெர்சியல் பட இயக்குனர் வி சி வடிவுடையான் இந்த படத்தை இயக்குகிறார். ஸ்டீவ்ஸ் கார்னர் சார்பில் தன்னுடைய முதல் படமாக இதை தயாரிக்க இருக்கிறார் பொன்ஸ் ஸ்டீஃபன். இன்னும் தலைப்பிடப்படாத இந்த படம், மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் தென்னிந்திய கலாச்சாரங்களை மையப்படுத்தி எடுக்கப்படும் படமாகும். சன்னி லியோன் அவரின் அடையாளமாக இருக்கும் கிளாமர் ரூட்டில் இனி பயணிப்பதில்லை என்ற தைரியமான முடிவை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சரித்திர படத்தில் நடிக்க கத்திசண்டை, குதிரையேற்றம் மற்றும் மற்ற சண்டைக் கலைகளையும் கற்று வருகிறார் சன்னி லி...
