Wednesday, February 11
Shadow

Tag: #suriya #karthi #sivakumar

தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் மருத்துவ செலவை ஏற்ற சூர்யா

தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் மருத்துவ செலவை ஏற்ற சூர்யா

Latest News, Top Highlights
தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட தனது ரசிகரை வீட்டுக்கு நேரில் வரவழைத்து அவருடன் கொஞ்சி மகிழ்ந்த நடிகர் சூர்யா, சிறுவனின் மருத்துவ செலவினை முழுமையாக ஏற்று கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளார். தேனி அருகில் உள்ள காட்டுநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சிறுவன் தினேஷ்குமார். 16 வயதான இவர், ராமர்- மல்லிகா தம்பதியின் மூத்த மகன். பிறக்கும் போது மிகவும் சுறுசுறுப்பாக இருந்து வந்த தினேஷ்குமாருக்கு தனது 10 வது வயதில் நடக்கும் போது திடீர் திடீர் என கீழே விழு ஆரம்பித்தார். எழுந்து நிற்க முடியாமல் சிரமபட்டார். இதற்கு அவனது பெற்றோர்கள் மருத்துவ சிகிச்சை அளிக்க துவங்கிய போதுதான் பேரதிர்ச்சி காத்திருந்தது. தினேஷூக்கு தசைச் சிதைவு நோய் இருப்பதும், இந்த நோய்க்கு சரியான மருத்துவ சிகிச்சை முறைகள் இல்லாததும் தெரிய வந்தது. ஒரு கட்டத்தில் தசைகள் எல்லாம் சிதைந்து போன நிலையில் சக்கர நாற்காலியிலேயே அன்று முதல் இன்று வரை தனது ...