திருமணத்துக்காக நடிகை சுருதிஹாசன் சினிமாவை விட்டு விலகலா ?
உலகநாயகன் மகள் சுருதிஹாசன் என்றாலே எப்போதும் எதாவது ஒரு பரபரப்பு இருக்கும் சமீப காலமாக அவருக்கு திருமணம் அவரின் காதலர் லண்டன் நடிகர் மைக்கேல் அவருடன் திருமணம் என்ற வதந்தி வந்து கொண்டே இருக்கிறது அதோடு அவ சினிமாவில் நடிப்பதை விட்டு விட்டுவிட்டதாக செய்தியும் வருது இதை பற்றி அவரிடம் கேட்டபோது
“என் வாழ்க்கையில் நான் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கிறது. தயவு செய்து எனது திருமணத்தையும், சினிமாவையும் இணைத்து பேச வேண்டாம். திரையில் உங்களை நீண்ட நாட்கள் பார்க்க முடியவில்லையே.. சினிமாவை விட்டு ஒதுங்கி விட்டீர்களா? என்றெல்லாம் என்னிடம் கேள்வி எழுப்பப்படுகிறது. படங்களில் மட்டும்தான் நான் நடிக்க வேண்டுமா? வேறு வேலைகளே எனக்கு கிடையாதா? எனது வாழ்க்கை சினிமாவுடன் மட்டுமன்றி வேறு நிறைய விஷயங்களோடு பின்னி பிணைந்து இருக்கிறது. எனவே சினிமாவில் நடிக்காமல் திருமணத்துக்கு தயாராகி விட்டேன் என்றும், வேறு ...
