Wednesday, October 28
Shadow

Tag: #surya #hari @ganavelraja @studiogreen #

‘எஸ் 3’ – இசை வெளியீட்டு விழா நடப்பது சந்தேகம் ?

‘எஸ் 3’ – இசை வெளியீட்டு விழா நடப்பது சந்தேகம் ?

Latest News
சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிக்க ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சிங்கம் 3’ படத்தின் மூன்றாவது பாகமான ‘எஸ் 3’ படத்தின் இசை வரும் 27ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்தாமல், யு டியூப் மற்றும் இணையதளங்கள் மூலமே வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். சூர்யா தற்போது ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்திற்காக காரைக்குடியில் முகாமிட்டுள்ளார். அங்கு இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ச்சியாக ஒரு வாரம் நடக்க உள்ளதாம். 27ம் தேதி இசை வெளியீடு நடத்தினால் படப்பிடிப்பை ஒரு நாள் நிறுத்திவிட்டுத்தான் அவர் வரவேண்டியிருக்கும். அதனால், விழாவே வேண்டாமென முடிவெடுத்திருக்கிறார்களாம். சமீப காலமாக சில தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் படங்கள் சார்ந்த பிரமோஷன்களை சமூக வலைத்தளங்கள் மூலம் மட்டுமே செய்து வருகின்றன. அவர்கள் ‘டிரென்டிங்’ வந்தால் மட்டுமே போதும் என நி...