பல உண்மைகள் வெளிவராத “சுவாதி கொலை வழக்கு” திரைப்படமாகிறது
S.D.ரமேஷ் செல்வன் இயக்கத்தில் அஜ்மல் நடிக்கும் படம் "சுவாதி கொலை வழக்கு" நிஜ சம்பவம் படமானது.
ஜெய சுபஸ்ரீ புரொடக்சன்ஸ் S.k.சுப்பையா தயாரிக்கும் படத்திற்குசுவாதி கொலை வழக்கு என்றுபெயரிட்டுள்ளனர்..
சமீபத்தில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி கொலை செய்யப்பட்ட கொடூரத்தை கையில்எடுத்திருக்கிறார் S.D.ரமேஷ் செல்வன்..இவர் விஜயகாந்த் நடித்த உளவுத்துறை அருண்விஜய் நடித்த ஜனனம் மற்றும் வஜ்ரம் படத்தையும் இயக்கியவர்.
இந்தப் படத்தில் சுவாதி கொலை வழக்கை விசாரிக்கும் நுங்கம்பாக்கம் இன்ஸ்பெக்டர் வேடத்தில் அஜ்மல் சங்கர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.கொலை செய்யப்பட்ட சுவாதி வேடத்தில் ஆயிரா நடிக்கிறார்.
மனோ என்ற புதியவர் ராம்குமாராகவும் A.வெங்கடேஷ் ராம்ராஜ் என்கிற வக்கீல் வேடத்திலும் பென்ஸ் கிளப் சக்தி செங்கோட்டை இன்ஸ்பெக்டர் வேடத்திலும் நடிக்கிறார்கள்.
கதை வசனத்தை R.P.ரவி எழுதி இருக்கிறா...
