
அருவி படத்தின் ரிலீஸ்க்கு காத்திருக்கும் ஸ்வேதா சேகர்
சிலருக்கு தெரிந்த முகம் என்றாலும், பலருக்கு புதுமுகமாகவே அறிமுகமாகும் ஸ்வேதா சேகர், அழகும் அறிவும் ஒருங்கே பெற்ற ஒருவர். நம்ம சென்னை மாநகரில் பரவலான பாராட்டை இன்னும் பெறவில்லையென்றாலும், நிச்சயம் நல்ல இடத்தை பிடிப்பேன் என்ற தன்னம்பிக்கையோடு இருக்கிறார். மற்ற குழந்தைகள் மூன்று வயதில் நடக்கவும், பேசவும் கற்றுக் கொண்டிருந்த நாட்களில் தன் மேடை நடிப்பு மற்றும் நடனத்தால் ரசிகர்களை கவர தொடங்கியவர் ஸ்வேதா. அதே நேரத்தில் பாரம்பரிய இசையிலும் பயிற்சி பெற துவங்கினார். படிப்பும் எளிதாக இருக்கவில்லை. அவரது பெற்றோர் அவர் மீது அதிக எதிர்பார்ப்பை வைத்திருந்தனர். எதிலும் இரண்டாம் பட்சமே இல்லை என்பது தான் அவரது கொள்கை. பேச்சரங்கம், கணித மற்றும் அறிவியல் போட்டிகளுக்கு செல்வதோடு நில்லாமல் நடிப்பு, பாடல் மற்றும் நடனப் போட்டிகளிலும் கலந்து கொண்டார். டேபிள் டென்னிஸ், பேஸ்கட் பால் போன்ற விளையாட்டுகளிலும் அவர் ச...