விஜய் சேதுபதி பற்றி தமன்னா என்ன சொல்லுகிறார் பாருங்க
சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் - தமன்னா நடிப்பில் கண்ணே கலைமானே வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கெண்டிருக்கிறது. இந்த நிலையில், மாலைமலர் இணையதளத்திற்கு தமன்னா அளித்த பிரத்யேக பேட்டியில் பேசியதாவது,
சீனு ராமசாமி பற்றி?
சீனு ராமசாமி சார் ஒரு தேசியவாதி. வேறு நாட்டு பொருட்களுக்கு பதிலாக, இந்தியாவில் உற்பத்தியாகும் பொருட்களை நாம் பயன்படுத்த வேண்டும் என்ற நல்ல எண்ணம் கொண்டவர். பெண்ணியத்தை மதிப்பவர். அவருடைய படத்தில் நாயகிக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும்.
தமிழ் பையன தான் கல்யாணம் பண்ணவேன்ணு சொன்னீர்களே?
நான் முன்னதாக அளித்த பேட்டி ஒன்றில் தவறாக அது புரிந்து கொள்ளப்பட்டது. மொழி பிரச்சனையால் அப்படி புரிந்து கொண்டார்கள் என்று நினைக்கிறேன். நான் அப்படி சொல்லவில்லை. ஒரு நல்ல பையன் கிடைக்க வேண்டும். தமிழோ அல்லது வேறு எந்த மொழி, சாதி, மதமாக இருந்தாலும் பரவாயில்லை. நல்லவராக இரு...
