தலைமுறைகளைத் தாண்டி ஒலிக்கும் யுவனின் இசை – ‘Walking Through the Rainbow’ நிகழ்ச்சியில் புதிய இசை அனுபவம்!
தலைமுறைகளைத் தாண்டி ஒலிக்கும் யுவனின் இசை – ‘Walking Through the Rainbow’ நிகழ்ச்சியில் புதிய இசை அனுபவம்!
யுவன் ஷங்கர் ராஜாவின் இசைக்கு தனி ரசிகர் பட்டாளம் இருப்பது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக 2000-களில் அவரது பாடல்களையும் பின்னணி இசையையும் கேட்டு வளர்ந்த மில்லினியல்ஸ் தலைமுறைக்கு, யுவனின் இசை என்பது வெறும் பாடல்கள் அல்ல; அவர்களின் வாழ்க்கையின் பல நினைவுகளோடு இணைந்த ஒரு உணர்வு. அந்த இசையை இன்று Gen Z தலைமுறையும் தங்களுக்கான புதிய அனுபவமாக கொண்டாடத் தொடங்கியுள்ளது.
அதற்கு சாட்சியாக அமைந்துள்ளது சென்னையில் செப்டம்பர் 19-ம் தேதி நடைபெற்ற ‘Walking Through the Rainbow’ இசை நிகழ்ச்சி.
திரைப்படங்களில் இதுவரை திரைக்குப் பின்னால் ரசிகர்களை ரசிக்க வைத்த யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை, இந்த நிகழ்ச்சியின் மூலம் நேரடியாக மேடையின் மையத்திற்கு வந்தது. அவரது பின்னணி இசைக் கோர்வைகள், இசைக் கருக...




