Wednesday, October 28
Shadow

Tag: #tamilnadushortfilmaward #jatricks

தமிழ்நாடு குறும்படங்கள் போட்டியில் சிறந்த இசையமைப்பாளராக தேர்வான ஜாட்ரிக்ஸ்*

தமிழ்நாடு குறும்படங்கள் போட்டியில் சிறந்த இசையமைப்பாளராக தேர்வான ஜாட்ரிக்ஸ்*

Latest News, Top Highlights
பிரபல டைரக்டர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய விக்னேஷ்குமார் நடித்து இயக்கிய குறும்படம் ‘மேகம் செல்லும் தூரம்’ தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் தயாராகி வெளிவந்த இந்த படத்துக்கு 17 வயது நிரம்பிய இளம் இசையமைப்பாளர் ஜாட்ரிக்ஸ் இசையமைத்திருந்தார். சரண் ஒளிப்பதிவு செய்திருந்தார். மா.மோகன் பாடல் எழுதியிருந்தார். இந்த குறும்படம் திரையுலகினர் மத்தியிலும் சமூக வலைத்தளங்களிலும் பெரிய வரவேற்பைப் பெற்றது. தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் நடிகர் விஷால், நடிகர் உதயநிதி ஸ்டாலின், டைரக்டர்கள் எஸ்.பி.முத்துராமன், எஸ்.பி.ஜனநாதன், சசிகுமார் உள்ளிட்டோர் படத்தைப் பார்த்து விக்னேஷ்குமார் நடிப்பும், ஜாட்ரிக்ஸின் இசையும் மா.மோகன் எழுதிய பாடல் வரிகளும், சரண் ஒளிப்பதிவும் சிறப்பாக இருந்ததாக பாராட்டினர். இந்த குறும்படத்தை இதுவரை 84 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் யூடியூப்பில் பார்த்து பாராட்டி உள்ளனர...