தமிழரின் தலைவன் கமல்ஹாசன் அதுனால எங்கள் அணி தமிழ் தலைவாஸ்
விவோ புரோ கபடி லீக் 5-வது சீசன் போட்டிகள் வரும் 28-ம் தேதி தொடங்குகிறது. 11 மாநிலங்களில் இருந்து 12 அணிகள் இதில் கலந்து கொள்ள உள்ளன. சச்சின் டெண்டுல்கர் இணை உரிமையாளராக உள்ள தமிழ்நாடு அணி ‘தமிழ் தலைவாஸ்’ என்ற பெயரில் களமிறங்குகிறது. 'தமிழ் தலைவாஸ்' அணியின் தூதராக நடிகர் கமல்ஹாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கிடையே தமிழ் தலைவாஸ் அணியின் ஜெர்சி அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சச்சின், கமல்ஹாசன், அல்லு அர்ஜுன் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.
இவ்விழாவில் கமல்ஹாசன் பேசியதாவது:
''என்னை கபடி விளையாடக் கூடாது என்று தடுத்தது ஒரு பட இயக்குநர். வெளியூரில் படப்பிடிப்பில் இருக்கும் போது ஸ்டண்ட் நண்பர்களோடு நிறைய கபடி விளையாடுவேன். ஒரு முறை ஆர்வமாக விளையாடிக் கொண்டிருக்கும் போது, மூக்கு உடைந்துவிட்டது. ஆகையால் அடுத்த நாள் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டார்கள். அதிலிருந்து என...
