சுந்தர்.சி-ன் அவ்னி மூவிஸ் தயாரிப்பில் ஹிப் ஹாப் தமிழா நடிக்கும் புதிய படம் !
ஹிப் ஹாப் தமிழா’ என்ற ஆல்பம் மூலம் youtube-ல் கலக்கியவர் ஆதி. இவர் ‘மீசைய முறுக்கு’ படம் மூலம் நடிகராகவும், இயக்குநராகவும் அறிமுகமானார். பரபரப்பாக பேசப்பட்டு மாபெரும் வெற்றிப் பெற்ற இப்படத்தை அவ்னி மூவிஸ் சார்பில் சுந்தர்.சி தயாரித்திருந்தார். இவர் கதாநாயகனாக நடிக்கும் இரண்டாவது படத்தையும் சுந்தர்.சி-யே தயாரிக்கிறார். இவருக்கு ஜோடியாக புதுமுகம் அனகா அறிமுகமாகிறார். இப்படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.
இப்படத்தை இயக்கும் பொறுப்பை D.பார்த்திபன் தேசிங்கு ஏற்றிருக்கிறார். ‘மான் கராத்தே’, ‘ரெமோ’ படங்களில் இணை இயக்குநராக பணிபுரிந்த இவர், இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார்.
ko
இப்படம் ஹாக்கி விளையாட்டு சம்பந்தப்பட்ட படம் என்பதால் பல ஊர்களுக்கும் சென்று படமாக்கியுள்ளார்கள். இறுதிக்கட்ட காட்சிகள் மட்டும் 20 நாட்கள் படமாக்கப்பட்டது. நமது தேசிய விளையா...
