சினிமா பிதாமகன் பிலிம் நியூஸ் ஆனந்தன் வழி தொடரும் பெரு துளசி பழனிவேல்
தமிழ் தென்னிந்திய திரைப்பட உலகின் தகவல் களஞ்சியம் என்று அழைக்கப்பட்டவர் மரியாதைக்குரிய பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்கள். இவர் திரைப்படத் துறையில் மக்கள் தொடர்புப் பணியில் இருந்த போது நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் என அனைத்துத் திரைப்படத் துறையினர் குறித்த தகவல்களையும் சேகரித்து வைத்திருந்தார்.
சென்னையில் பல ஆண்டுகளாக “ஃபிலிம் நியூஸ்” என்ற திரைப்படச் செய்தி நிறுவனத்தை நடத்தி வந்தார். இவரிடமிருந்த தமிழ்த்திரைப்பட செய்திகள் அனைத்தும்
“சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு” என்ற பெயரில் நூலாக வெளியிடப்பட்டது.
தமிழ்த் திரையுலகச் செய்திகள் அனைத்தையும் வருடாவருடம் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த தமிழ்த் திரையுலகின் என்சைக்ளோபீடியாவான பிலிம் நியூஸ்
ஆனந்தன் கடந்த வருடம் காலமானார்.
அவருடைய மறைவுக்குப் பிறகு யார் அந்த சேவையைத் தொடர்வது என்கிற கேள்வி எழுந்...
