நடிகர் ராம் சரண் பிறந்த தின பதிவு
ராம் சரண் தெலுங்கு திரைப்பட நடிகர் ஆவார். 2007ம் ஆண்டு சிறுத்தை என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்பட துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களில் நடித்ததன் மூலம் நந்தி விருது, பிலிம்பேர் விருது போன்ற பல விருதுகளை வென்றார். இவர் தெலுங்கு திரைப்பட சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ஆவார்.
இவர் தமிழ்நாடு மாநிலம், சென்னையில் பிறந்தார். இவரின் தந்தை சிரஞ்சீவி மற்றும் தாய் சுரேகா சிரஞ்சீவி ஆவார். இவரின் குடும்பம் ஒரு திரைப்பட கலை குடும்பம் ஆகும். இவர் டிசம்பர் 1ம் திகதி 2011ம் ஆண்டு உபாசனா காமினேனி என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
2007ம் ஆண்டு சிறுத்தை என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்பட துறைக்கு அறிமுகமானார். இந்த திரைப்படம் 50 நாட்களை கடந்து ஓடியது. இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருது மற்றும் நந்தி சிறப்பு நடுவர் விர...