
தானா சேர்ந்த கூட்டம் படத்தில் என்னுடைய கதாபாத்திரத்துக்கு பெயரே கிடையாது – கீர்த்தி சுரேஷ் பேட்டி
தமிழ் சினிமாவில் தற்போது நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். வருகிற பொங்கல் அன்று வெளியாகவுள்ள ஸ்டுடியோ கிரீன் K.E. ஞானவேல் ராஜாவின் “ தானா சேர்ந்த கூட்டம் “ படத்தில் சூர்யாவுக்கு ஜோடி இவர் தான். தானா சேர்ந்த கூட்டம் படத்தை பற்றியும் , தன்னுடைய கதாபாத்திரம் மற்றும் தன்னோட நடித்த நடிகர்கள் மற்றும் டெக்னிஷியன்ஸ் பற்றியும் கூறுகிறார் கீர்த்தி சுரேஷ்.
தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நான் பிராமண பெண் வேடத்தில் நடிக்கிறேன். படத்தில் என்னுடைய கதாபாத்திரத்துக்கு பெயரே கிடையாது. நான் ஹுமர் கலந்த சஸ்பன்ஸ் வேடத்தில் நடிக்கிறேன். இயக்குநர் விக்னேஷ் சிவன் கதை சொல்லும் போதே எனக்கு கதையும் என்னுடைய கதாபாத்திரமும் மிகவும் பிடித்திருந்தது.
பள்ளி பருவத்திலேயே நான் சூர்யாவின் மிகப்பெரிய ரசிகை. என்னுடைய அம்மா சூர்யாவின் தந்தை நடிகர் சிவகுமாருடன் மூன்று படத்தில் நடித்துள்ளார். நான் ஸ்கூல் படிக்கும் போது ந...