Saturday, February 14
Shadow

Tag: #thadam

வசூல் வேட்டையில் மாஸ் ஹிட் பட வரிசையில் இடம் பிடிக்குமா “தடம்”?

வசூல் வேட்டையில் மாஸ் ஹிட் பட வரிசையில் இடம் பிடிக்குமா “தடம்”?

Latest News, Top Highlights
இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கிய படங்களில் அதிக வசூல் செய்த படமாக நடிகர் அருண் விஜய்யின் தடம் மாறியுள்ளது. கடந்த மார்ச் 1ம் தேதி வெளியான தடம் படம் வெளியாது முதலே நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த படம் வெளியாகி 17 நாட்கள் ஆகியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் 18.6 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. மேலும், ரசிகர்களின் ஆதரவால், வசூல் 20 கோடி ரூபாய் படம் தாண்டி மாஸ் ஹிட் பட வரிசையில் இடம் பிடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது....
தடத்தை முடித்த அருண் விஜய்

தடத்தை முடித்த அருண் விஜய்

Latest News, Top Highlights
இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் தடம் என்ற படத்தில் நடிகர் அருண் விஜய் நடித்து வருகிறார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே வெளியான படம் தான் தடையறத் தாக்க. இந்தப்படம் ரசிகர்களிடமும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ‘தடம் படத்தில் அருண் விஜய்-க்கு ஜோடியாக தன்யா, ஸ்ம்ருதி, வித்யா பிரதீப் என மூன்று ஹீரோயின்கள் நடித்துள்ளனர். படத்தை ‘ரேதன்-தி சினிமா பீப்பிள் நிறுவனம் சார்பில் இந்தர் குமார் தயாரிக்கிறார். படத்திற்கு அருண்ராஜ் இசையமைக்கிறார். சமீபத்தில், இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, படத்தின் ஷூட்டிங் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது அருண் விஜய் அறிவித்துள்ளார். மேலும் அடுத்த படத்தின் அறிவிப்பு விரைவில் அறிக்கிறேன் என்றும் கூறியிருக்கிறார்....
முதல் முறையாக ரூட்டை மாற்றும் அருண் விஜய்!

முதல் முறையாக ரூட்டை மாற்றும் அருண் விஜய்!

Latest News, Top Highlights
’குற்றம் 23’ படத்திற்கு பிறகு அருண் விஜய் நடித்து வரும் அடுத்த படம் தடம். இப்படத்தை மகிழ் திருமேணி இயக்கி வருகிறார். படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் படத்தின் முக்கிய ஒரு தகவலை அருண் விஜய் இன்று வெளியிட்டுள்ளார். இப்படத்தில் முதல் முறையாக அருண் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கவிருக்கிறாராம். எழில், கவின் என்ற இரு வேடங்களில் நடிக்கவிருக்கிறாராம். ரொமண்டிக் த்ரில்லர் கதையாக இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் நாயகிகளாக தன்யா ஹாப், ஸ்மிரிதி மற்றும் வித்யா பிரதீப் ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்தின் ஒளிப்பதிவு பொறுப்பை கோபிநாத் ஏற்றுள்ளார். அருண் ராஜ் இசை அமைக்கிறார்....