பெண் கொடுமைக்கு எதிரான படம் ”தமிழனானேன்.க”
அண்மையில் மெரினாவில் நடந்து முடிந்த தமிழ் இளைஞர்களின் 'தைப்புரட்சி' பாரம்பரியத்தை மீட்டு எடுக்கும் அவர்களின் எழுச்சியை உலகிற்கு எடுத்துக் காட்டியிருக்கிறது..
அந்தக் காலத் தமிழர்கள் பகை முடிக்கும் வீரத்திலும் பாசம் காட்டும் ஈரத்திலும் சிறந்து விளங்கினார்கள்.
ஆனால் இன்று தமிழர்களிடம் ஒன்று இருந்தால் இன்னொன்று இல்லாத நிலை உள்ளது.
தமிழனின் தவறான மனப்போக்கால் தான் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடந்து வருகின்றன.
இப்போது நிலவும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஆதித்தமிழன் எதிர் கொண்டால் எப்படிக் கையாள்வான்? தீர்வு காண எப்படி நடந்து கொள்வான்? என்பதைப் பேசும் படம் தான் 'தமிழனானேன்.க ' .
இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் , பாடல்கள் எழுதி இயக்கி நாயகனாகவும் நடித்திருக்கிறார் சதீஷ் ராமகிருஷ்ணன்.
கோவைக்காரரான இவருக்கு உலக தற்காப்புக் கலைகளில் ஆர்வம் . குறிப்பாக ஒரு காலத்தில் புகழ் பெற்று இர...
